This is your homepage | Add favorites | Feedback | Entertainments | Study Links | Font help

Home

About us

Contact us

Mission

Gallery

Notice

Site map

Webmail

 

ஆலயங்கள்

:: பிள்ளையார்

:: வீரபத்திரர்

:: நாச்சிமார்

:: அருளம்பலசுவாமி

:: வீரபத்திரர் ஆலய

   திருப்பணிச்சபை

:: பங்களிப்புக்கள்

:: விபரங்கள்

 

 

ஆக்கங்கள்

:: கவிதைகள்

:: கட்டுரைகள்

:: திருக்குறள்

:: நகைச்சுவை

:: பழமொழிகள்

:: சிறுவர்பகுதி

 

பொதுவானவை

:: கலைமணி

:: மேலைப்புலோலி

:: சாயி நிலையம்

:: பாடசாலைகள்

:: பல்கலைக்கழக...

:: கல்விப்பகுதி

:: வாழ்த்துக்கள்

:: அறிவித்தல்கள்

:: ஜோதிடம்

:: புதுவருடபலன்கள்

:: மருத்துவம்

:: தொழில்நுட்பம்

:: புகைப்படங்கள்

:: இணைப்புகள்

:: தேடல்

:: பாடல்

:: பதிவிறக்கம்

 


முன்பள்ளி ஆசிரியை செல்வி சகுந்தலாதேவி கணபதிப்பிள்ளை அவர்களின் சேவைநலன் பேணலுக்கான அமைப்புக்குழு.
 

பருத்தித்துறை,
இலங்கை.

அன்புடையீர்,

   நீங்கள் பிறந்து, தவழ்ந்து, மண்ணள்ளி விளையாடிய உங்கள் தாய்மண்ணில் இருந்து இம்மடலை வரைகின்றோம். நீங்கள் பிறந்த பொன்னாட்டில் உங்களுக்க கல்விக் கண்ணைத் திறக்கவைக்க அரிச்சுவடியைக் கற்பித்தவர், உங்கள் (நேசறி ரீச்சர்) முன்பள்ளி ஆசிரியையான செல்வி சகுந்தலாதேவி கணபதிப்பிள்ளை அவர்கள். ஆவரை நீங்கள் “அச்சி அக்கா” என்று அன்பாக அழைத்திருப்பீர்கள். அவரைப் பற்றியதாகவே இம்மடல் அமைகின்றது.
   அச்சியக்கா உங்கள் பிறந்த கிராமத்தில், அதையண்டிய அயல் கிராமங்களில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஆசிரிய சேவையினை மிகவும் அர்ப்பணிப்புடன் தியாக மனப்பான்மையுடன் அன்புடன் ஆற்றி எத்தனையோ நல்ல கல்வியியலாளர்களை, நல்லவர்களை, வல்லவர்களை உருவாக்கியிருக்கிறார். இத்தகைய நல்ல உள்ளம் திருமணம் கூட செய்யாமல் தனது வாழ்க்கையையே இளஞ் சிறார்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குவதிலேயே செலவிட்டு காலத்தைக் கழித்து இன்று ஓய்வு பெறும் வயதைக் கடந்து நிற்கிறது. வெறும் சொற்ப ஊதியத்தில் இவ்வளவு காலமும் சேவையாற்றிய அந்த நல்ல ஆசிரியை ஓய்வுக் காலத்தில் எவரது உதவியும் இன்றி கஷ்டப்படுவதை நாம் அனுமதித்தோமானால் இந்த சமூகம் நன்றி கெட்ட ஒரு சமூகமாகவே கருதப்படும்.
    எனவேதான் அவரது சேவை நலனையும் பாராட்டி ஒரு விழாவை எடுத்து அவருடைய ஓய்வுக் காலத்தில் அவா நலமாய் வாழ ஒரு தொகை பணத்தை நிலையான வைப்பிலிட்டு அவரிடம் வழங்க ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஓர் அமைப்புக் குழவை அமைத்துள்ளார்கள். எனவே அவரிடம் கல்வி கற்று இன்று நல்லதொரு நிலையில் உள்ள நீங்களும் இந்த நன்றிக்கடனை செலுத்துவதில் பின்னிற்க மாட்டீர்கள் என நாம் கருதுகிறோம். எனவே அவருக்கு உங்கள் அன்பளிப்பாக ஒரு சிறு தொகைப் பணத்தையாவது வழங்கி இந்த நல்ல சமூக முன்னேற்ற செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பீர்கள் என நம்பி அவருடைய இந்தப் பாராட்டு விழாவை இவ்வருடத்தில் எளிமையாக நடாத்த தீர்மானித்துள்ளதால் உங்கள் அன்பளிப்புக்களை விரைவில் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். இத்துடன் இம்மடலை நிறைவு செய்கிறோம்.
 

நன்றி.

கி.குகநாதன்                                         வே.நந்தகுமார்
 தலைவர்                                             செயலாளர்


குறிப்பு:

உங்கள் பங்களிப்புக்களை செல்வி சகுந்தலாதேவி கணபதிப்பிள்ளை
சேமிப்புக் கணக்கு இலக்கம் : 46068
தேசிய சேமிப்பு வங்கி – பருத்தித்தறை எனும் சேமிப்புக் கணக்கிற்கு அனுப்பலாம்.

தொடர்புகளுக்கு : திரு.கி.குகநாதன் - தலைவர் – 0094 (0)21 226 3439
               திரு .க.மோகனதாஸ் - பொருளாளர் – 0094 (0)21 226 4610
 

VISG-Notice-26.04.2008